கோவாவின் அழகிய கடற்கரையில் ஆபாசமாக வீடியோவில் நடித்ததற்காக பிரபல நடிகை பூனம் பாண்டே மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பூனம் பாண்டே சமீபத்தில் கோவாவில் தனது படப்பிடிப்பை முடித்துவிட்டு மும்பைக்கு திரும்பியிருந்தார், இந்நிலையில் தற்போது கோவா ஃபார்வர்ட் கட்சியின் பெண்கள் பிரிவு சபோலி அணையில் ஒரு ஆபாச வீடியோவை படமாக்கியதாக அவர் மீது புகார் அளித்துள்ளார்கள். மக்கள் கூடும் பொது இடத்தில் ஆடி பாடி ஆபாச வீடியோ எடுத்ததாக அவர் மீது ஐபிசி பிரிவு 294 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Goa: FIR filed against an unknown person at Canacona PS for shooting of vulgar video featuring actress Poonam Pandey. Offence registered under IPC. Also, women's wing of Goa Forward Party filed a complaint against Pandey for shooting obscene video at Chapoli Dam
— ANI (@ANI) November 4, 2020