சிஆர்பிசி பிரிவு 144 ன் கீழ் விதிகளை மீறியதற்காக காங்கிரஸ் எம்எல்ஏ சித்தார்த் குஷ்வாஹாவுக்கு எதிராக சத்னாவில் உள்ள கொல்கவன் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் எம்.எல்.ஏ மற்றவர்களுடன் சேர்ந்து நாய் பஸ்தி பகுதியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியுள்ளார். இதையடுத்து. பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், விதிகளை மீறி வெளியே வருபவர்களுக்கு காவல்துறை அதிகாரிகள் தகுந்த தண்டனையை அளித்து வருகிறது. இந்த நிலையில், உள்ளிருப்பு போராட்டம் நடத்த முயன்ற காங்கிரஸ் எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5194 ஆக உயர்ந்துள்ளது.
அதில் இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4643 ஆகும். மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 401 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 773 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 10 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.