Categories
உலக செய்திகள்

தீ வைத்து கொளுத்தப்பட்ட இடங்கள்…. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை…. திட்டவட்டமாக மறுத்த இளம்பெண்….!!

கலிபோர்னியாவில் காட்டை தீ வைத்து கொளுத்திய குற்றத்திற்காக காவல்துறை அதிகாரிகள் கைது செய்த இளம்பெண் தன்மீதான குற்றத்தை மறுத்துள்ளார்.

கலிபோர்னியாவில் 41 வீடுகள் உட்பட பல ஏக்கர் அளவிலான நிலங்களுக்கு தீ வைத்ததாக கூறி காவல் துறை அதிகாரிகள் அலெக்சாண்ட்ரா என்னும் இளம்பெண்ணை கைது செய்துள்ளார்கள். ஆனால் அந்த இளம்பெண் தான் வேண்டுமென்றே எந்த ஒரு பகுதிக்கும் தீ வைக்கவில்லை என்று தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இதனையடுத்து அலெக்ஸாண்ட்ரா போராடி தாகத்தைத் தீர்ப்பதற்காக குடிநீரை கொதிக்க வைக்க தீயை உருவாக்க நினைத்தேன் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் தீப்பற்றி எரிந்த இடத்தில் நின்று கொண்டிருந்த அலெக்சாண்ட்ராவின் கையில் சிகரெட் லைட்டர் இருந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். இதற்கிடையே இவருடைய குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் சிறை தண்டனை கட்டாயமாக விதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது

Categories

Tech |