புதுக்கோட்டை மாவட்டத்தில் திடீரென கீற்றுக்கொட்டகையில் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் கீற்றுக்கொட்டகை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கீற்றுக்கொட்டகையில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுக்குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை மேலும் பரவாமல் தடுத்து அணைத்துள்ளனர். ஆனால் கொட்டகை முழுவதும் எரிந்து நாசமானது. இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு பக்கத்துக்கு வீடுகளில் தீ பரவாமல் தடுத்து அணைத்துள்ளனர்.