புதுக்கோட்டை மாவட்டத்தில் தைலமரக்காட்டில் திடீரென தீப்பற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி பகுதியில் அமீர் பாட்சா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தைலமரக்காடு ஒன்று ஆயிப்பட்டியில் உள்ளது. இந்நிலையில் அந்த தைல மரக்காட்டில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுக்குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை மேலும் பரவாமல் தடுத்து அணைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.