சேலம் மாவட்டத்தில் மலைப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பற்றி செடி கொடிகள் முழுவதும் எரிந்து சாமபலாகியுள்ளன.
சேலம் மாவட்டத்திலுள்ள கவர்க்கல்பட்டி பகுதியிலிருக்கும் முஸ்தோப்பு கரடு என்னும் மலைப்பகுதியில் திடீரென காட்டுத் தீ பற்றி எரியத் தொடங்கியுள்ளது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென்று பரவியுள்ளது. இதுக்குறித்து தகவலறிந்த வாழப்பாடி தாசில்தார் மாணிக்கம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருகில் ஏதும் குடியிருப்பு உள்ளதா என ஆய்வு செய்துள்ளார்.
இதனையடுத்து குடியிப்புகள் ஏதும் இல்லை என உறுதிப்படுத்திய பின்பு தாசில்தார் சம்பந்தப்பட்ட வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் தீயை அணைக்க வழியில்லாததால் தொடர்ந்து தீ நள்ளிரவு வரை எரிந்து கொண்டிருந்ததால் மலைப்பகுதியில் உள்ள செடி கொடிகள் எரிந்து சாம்பலாகியுள்ளன.