Categories
உலக செய்திகள்

என்ன…! கடல்ல தீ எரியுதா…? 5 மணிநேரம் போராடிய வீரர்கள்…. பிரபல நாட்டில் நடந்த சம்பவம்….!!

மெக்ஸிக்கோவில் இருக்கும் வளைகுடா கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டிருக்கும் எரிவாயு குழாயில் திடீரென்று கசிவு ஏற்பட்டுள்ளதால் அங்கு வட்ட வடிவில் தீ ஏற்பட்டுள்ளது.

மெக்ஸிக்கோவில் இருக்கும் வளைகுடா கடலுக்கடியில் எரிவாயு குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீருக்கடியில் இருக்கும் எரிவாயு குழாயில் திடீரென்று கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கடலின் மேற்பரப்பில் வட்ட வடிவில் தீ ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு கடலின் மேற்பரப்பில் தீப்பிடித்த இடத்திற்கு சற்று அருகே எண்ணெய் எடுக்கும் இடம் அமைந்துள்ளது. இதனையடுத்து தீப்பற்றி எரிந்த இடத்திற்கு தீயணைக்கும் படகுகள் விரைந்து வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைக்கும் படகுகள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்கள்.

Categories

Tech |