ஸ்விட்சர்லாந்திலுள்ள சாலையில் சென்றுக்கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அங்கு சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் Buochs என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியிலுள்ள A2 என்னும் மிகவும் முக்கியமான சாலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் காரில் சென்றுள்ளார்கள். அப்போது அவர்கள் காரில் திடீரென புகை வெளியேறியுள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் உடனடியாக காரை விட்டு வெளியேறி சாலையின் ஓரத்தில் நின்றுள்ளார்கள். இதனையடுத்து புகை வெளியேறிய அந்தக் கார் திடீரென சாலையில் வைத்தே தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி காரில் பற்றி எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்கள். இதனால் அந்த A2 என்னும் மிக முக்கிய சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.