தீப்பெட்டி வைத்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தீயில் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள இளையார் குளம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன்-பால்கனி தம்பதியினர். இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு 3 குழந்தைகள் இருந்தனர். அதில் ஒரு குழந்தையான லக்ஷ்மிக்கு ஐந்து வயது ஆகின்றது. இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று கணவன் மனைவி கூலி வேலைக்கு சென்ற பிறகு பிள்ளைகள் மூவரும் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சிறுமி லட்சுமியின் கையில் தீப்பெட்டி வைத்து விளையாடும் போது விளையாட்டாகக் தீ பற்ற வைத்துள்ளார்.
அதில் எதிர்பாராத விதமாக தீ குழந்தையின் ஆடையின் மீது பிடித்துள்ளது. இந்த தீ வேகமாக பரவியதால் குழந்தை அலறல் சத்தத்தை அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்துள்ளனர். அதன்பின் குழந்தையை நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காத காரணத்தினால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து நாங்குநேரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.