Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மளமளவென பற்றிய தீ… சிக்கிய தொழிலாளி பலி… திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

பஞ்சு மில்லில் ஏற்பட்ட தீ விபத்தினால் வாலிபர் ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஷாஜகான் என்பவர் குடைபாறைப்பட்டி பகுதியில் பஞ்சு ஆலை நடத்தி வந்துள்ளார். இந்தப் பஞ்சாலையில் நேற்று  திடீரென தீப்பற்றியது. இது ஆலையின் ஒரு பகுதியில் மட்டும் சிறிய அளவில் தீபற்ற தொடங்கியுள்ளது. இதனால் ஆலைக்கு உள்ளே வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இதைப் பற்றி எதுவும் தெரியவில்லை. பின்னர் தீ மளமளவென பரவி கரும்புகை ஆலையை சுற்றி சூழ்ந்துள்ளது.

அதன்பின் தொழிலாளர்களுக்கு ஆலையில் தீப்பற்றியது தெரியவந்துள்ளது. உடனே உள்ளே வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்துள்ளனர். அவர்கள் தொட்டியில் கிடக்கும் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியாத காரணத்தினால் அவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இந்த தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சில மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னரே மில்லில் ஏற்பட்ட தீ முற்றிலுமாக அணைந்துள்ளது. இதனையடுத்து ஆலையின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு தொழிலாளியாக வேலை செய்த பிரவீன் என்ற வாலிபர் பிணமாக கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரவீன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பிரவீன் உடலில் சிறிய அளவில் தீக்காயங்களே உள்ளதால் அவர் மூச்சுத்திணறலில் உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினர் கூறுகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர், மேலும் பஞ்சாலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தினால் ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான பஞ்சு மற்றும் ஆலை  உபகரணங்களும் எரிந்து நாசமாகி உள்ளன.

Categories

Tech |