மின்னணு சாதன கடையில் பற்றிய தீ 12 கடைகளில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள பெருமாள் தெப்பக்குளம் பகுதியில் மின்னணு சாதனக் கடை அமைந்துள்ளது. இந்த கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ மளமளவென பக்கத்தில் உள்ள இடங்களுக்கும் பரவியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது.
இதனை பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் 5 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மின்னணு சாதன கடையில் ஏற்பட்ட தீ 12 கடைகளுக்கு மேல் பரவியதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இந்நிலையில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி நீண்ட நேரத்திற்கு பின்பு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.