Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தூங்கும் போது நடந்த விபரீதம்… ரூ.60 ஆயிரத்தை இழந்த குடும்பம்… சீர்காழி எம்.எல்.ஏ ஆறுதல்..!!

சீர்காழியில் தீப்பிடித்து கூரை வீடு சாம்பலானதில் ரூபாய் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருள்கள் சேதமடைந்துள்ளன.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். சென்ற திங்கட்கிழமை அன்று சேகர் தனது குடும்பத்தோடு கூரை வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டின் கூரை தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அனைவரும் அலறி அடித்து வெளியே வந்துள்ளனர். இதையடுத்து தீ வேகமாக பரவ தொடங்கியுள்ளது. அதனால் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் சாம்பலாகின. வீட்டிலிருந்த பொருள்களின் மதிப்பு ரூபாய் 60 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வேகமாக பரவிக் கொண்டிருந்த தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த சீர்காழி பாரதி எம்.எல்.ஏ சேதமடைந்த வீட்டை மேற்பார்வையிட்டுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதோடு அரசி, வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களையும் வழங்கியுள்ளார்.

Categories

Tech |