Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பிரியாணி சமைக்கும் போதே…. மளமளவென பற்றி எரிந்த தீ…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

பிரியாணி ஹோட்டலில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உக்கடம் பகுதியில் வசித்து வரும் சபைர் என்பவர் காவல் நிலையம் அருகே பிரியாணி ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ஹோட்டலில் ஊழியர்கள் பிரியாணி சமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, சமையலறையில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு ஹோட்டலை விட்டு வெளியேறி விட்டனர்.

இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஹோட்டலில் இருந்த சிலிண்டர்களை அகற்றி, பற்றி எரிந்த தீயை உடனடியாக அணைத்து விட்டனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |