மலை மீது பற்றி எரியும் தீயானது காற்றின் வேகத்தால் மளமளவென பற்றி எரிகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பார்வதிபுரம், ஆரல்வாய்மொழி, தோவாளை போன்ற மலைத்தொடர்களில் அடிக்கடி தீ பிடிக்கிறது. இந்நிலையில் சுங்கான்கடை மலையில் உள்ள பல்வேறு இடங்களில் தீ பற்றி எரிந்துள்ளது. இந்த தீயில் அரிய வகை செடிகள் மற்றும் மரங்கள் கருகி விட்டன. மேலும் பலத்த காற்று காரணமாக தீயானது பல்வேறு இடங்களுக்கு பரவி கொண்டிருக்கிறது.
அதோடு தீ அணையாமல் பற்றி எரிவதால் எல்லா இடங்களிலும் புகை சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் இந்த தீயில் சிக்கி காட்டு விலங்குகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கொழுந்து விட்டெரியும் தீயானது மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் தீயை கூடிய விரைவில் அணைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.