Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… மளிகை கடையில் தூங்கிய வியாபாரி… சென்னையில் சோகம்..!!

சென்னையில் மளிகை கடையில் ஏற்பட்ட தீ விபத்தால் மளிகை வியாபாரி உடல் கருகி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள நீலாங்கரை பாரதியார் நகரில் முருகேஷ் பாண்டியன் என்பவர் வசித்து வந்தார். இவர் தந்தை சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் முருகேஷ் பண்டியன் தனது தம்பி மற்றும் தாயுடன் வசித்து வந்துள்ளார். முருகேஷ் பாண்டியன் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை வைத்து நடத்தி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மளிகை கடையில் வியாபாரம் முடித்து விட்டு இரவில் கடையிலேயே தூங்கியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் கடையிலிருந்து அதிக அளவு புகை வெளியேறியுள்ளது.

 

அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இது குறிப்பு தீயணைப்பு படையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை வெகு நேரத்திற்கு பின்பு அணைத்துள்ளனர். பின் கடைக்குள் சென்று பார்த்துள்ளனர். அங்கு முருகேசபாண்டியன் தீ விபத்தில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து தெரியவந்தது. இதையடுத்து இந்த விபத்து குறித்து  நீலாங்கரை காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். அந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |