தனியார் பஞ்சு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மைல்கல் என்ற பகுதியில் தனியார் பஞ்சு மில் அமைந்துள்ளது. இந்த மில்லில் வைக்கப்பட்டிருந்த பஞ்சு மூட்டைகளின் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்து விட்டனர். அதன்பிறகு அங்கு இருந்த பஞ்சு மூட்டைகளை வேறு பகுதியில் அடுக்கி வைத்துவிட்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில் வேறு இடத்தில் மாற்றி வைத்திருந்த பஞ்சு மூட்டைகளில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த மேட்டுப்பாளையம், அன்னூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு பல லட்சம் மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து நாசமாகி விட்டதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.