கடன் தொல்லையால் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன்-பரமேஸ்வரி தம்பதியினர். பரமேஸ்வரி உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்த நிலையில் இவர் அண்மையில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் தவித்துள்ளார். இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார். இந்நிலையில் மனமுடைந்த பரமேஸ்வரி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
நெருப்பின் வெப்பத்தை தாங்கமுடியாத காரணத்தினால் பரமேஸ்வரி கூச்சலிட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் வந்து தீயை அணைத்தனர். பின்பு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பரமேஸ்வரி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பரமேஸ்வரி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக அரகண்டநல்லூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.