Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

லாரியில் இருந்த வைக்கோல்…. உரசிய மின்கம்பிகள்…. தீயில் பலியான டிரைவர்….!!

தாழ்வாக இருந்த மின்கம்பிகள் வைக்கோல் மீது உரசியதால் ஏற்பட்ட தீ விபத்தில் டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் பகுதியில் ஒரு லாரி வைக்கோல் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை ரகுபதி என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அந்த லாரி காடந்தேத்தி பகுதியில் மின் கம்பிகள் தாழ்வாக உள்ளதால் அது லாரியின் மீதுள்ள  வைக்கோல் மீது உரசி உள்ளது. இதனால் வைக்கோலில் தீ பிடித்துள்ளது.

இதனை கவனித்த டிரைவர் தண்ணீர் உள்ள இடத்தில் லாரியை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது லாரியில் இருந்த வைக்கோலும் லாரியும் சேர்ந்து தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. இந்த தீ விபத்தில் டிரைவர் ரகுபதி பலத்த காயமடைந்துள்ளார். உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு இதுகுறித்து தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலின் பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்பு பற்றி எரிந்த தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்பின் காயமடைந்த ரகுபதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |