சமைத்துக் கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக சேலையில் தீப்பிடித்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள அய்யனார்புரம் பகுதியில் ஆறுமுகம்-பரமேஸ்வரி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று பரமேஸ்வரி சமையல் செய்வதற்காக கேஸ் சிலிண்டரை பற்ற வைத்துள்ளார். பின்னர் சமைத்து கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக பரமேஸ்வரியின் சேலையில் தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் அளிக்காத காரணத்தினால் பரமேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த பூதலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பரமேஸ்வரிக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆவதால் இந்த வழக்கை தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.