ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள தெற்கு மாசி வீதியில் ஜவுளிக்கடை 3 தளங்களில் இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 11.45 மணிக்கு கடையில் இருந்து புகை வெளியேறுவதை அக்கம் பக்கத்தினர் கண்டுள்ளனர். உடனடியாக அவர்கள் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இந்த தகவலின் பேரில் தல்லாகுளம் மற்றும் மதுரை டவுன் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்துள்ளனர். மேலும் இந்த தீயானது முதல் தளம் முற்றிலும் எறிந்த பின்னரே கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது. மேலும் மற்ற இரண்டு தளங்களும் முற்றிலுமாக தீயிலிருந்து தப்பியது. இதுகுறித்து மதுரை தெற்குவாசல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.