தூங்கிக்கொண்டிருக்கும்போது விளக்கு தீ பட்டு பெண் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காரை பகுதியைச் சார்ந்தவர் தேவகி. இவர் சம்பவம் நடந்த அன்று இரவு தனது வீட்டில் மண்ணெண்ணெய் விளக்கு ஏற்றி வைத்து விட்டு தூங்கச் சென்றுள்ளார். அந்த சமயம் விளக்கு தீ எதிர்பாராதவிதமாக அவர் மீது பட்டு படுகாயமடைந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து தேவகி சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து ராணிப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.