தனியார் பனியன் கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள டி.என்.பாளையத்தில் ஒரு தனியார் பனியன் கம்பெனி செயல்பட்டு வருகிறது. அந்த கம்பெனியில் உள்ள ஒரு அறையில் திடீரென கரும்புகை வெளியேறியது. இதனையடுத்து சற்று நேரத்தில் அந்த அறையில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனைப் பார்த்த கம்பெனியில் இருந்தவர்கள் இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த தீவிபத்தில் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்து மின்கசிவால் ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்புதுறையினர் தெரிவித்துள்ளனர்.