திடீரென குடிசையில் ஏற்பட்ட தீ விபத்தால் சிலிண்டர் வெடித்து பெண் மரணமடைந்தது மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருங்காடு வீதியை சேர்ந்தவர் ரமேஷ் நந்தினி தம்பதியினர். இத்தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு நந்தினி இவர்களது குடிசை வீட்டில் இருந்துள்ளார். கணவர் ரமேஷ் வீட்டின் வெளிப்புறம் நின்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக குடிசையில் தீப்பிடித்து வீட்டிலிருந்த சிலிண்டரும் வெடித்துள்ளது. வீட்டில் தீ பிடித்தது பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
மனைவி நந்தினி தீயில் சிக்கி இருப்பதை கண்டு மனைவியை காப்பாற்ற ரமேஷ் முயன்றுள்ளார். அப்போது அவரது முகம் மற்றும் உடலிலும் தீ பிடித்துள்ளது. நந்தினியும் குடிசையின் உள்ளே உடல் கருகி பிணமாக கிடந்துள்ளார். இதனை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.
பிறகு தீயணைப்பு வீரர்கள் நந்தினியின் உடலை மீட்டு கொடுக்க சித்தோடு காவல்துறையினர் நந்தினியின் உடலை பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.