Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சமையல் செய்து கொண்டிருந்த பெண்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

புடவையில் தீப்பிடித்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள சைதாப்பேட்டை பகுதியில் மணியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டில் சமையல் செய்வதற்காக மண்ணெண்ணெய் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மணியம்மாளின் புடவையில் தீ பற்றிக்கொண்டது. இதில் மணியம்மாளின் உடல் முழுவதும் தீ பற்றி எரிந்தது. அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக சென்று தீயை அணைத்தனர்.

அன்பின் மணியம்மாளை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மணியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |