சென்னையில் மற்றொரு படப்பிடிப்பு தளத்திலும் தீ விபத்து ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அண்மையில் இந்தியன்2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விபத்துநடந்து உயிர் சேதங்கள் ஏற்பட்ட நிலையில் தற்போது சென்னையில் இருக்கும் சாலிகிராமத்தில் சினிமா படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பு நடக்காத நிலையிலும் திடீரென தீ விபத்து ஏற்பட்டு படப்பிடிப்பு தளத்தில் முதல் தளம் முற்றிலுமாக எரிந்து உள்ளது. 2 தீயணைப்பு வீரர்கள் மெட்ரோ லாரி மூலம் தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்து வருகின்றனர்.