மின் கசிவினால் மூன்று கடைகள் அடுத்தடுத்து தீ பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள சந்தோஷ் நகரில் இருக்கும் ஒரு கடையில் இரவு 8 மணி அளவில் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. இதனால் அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வில்லிவாக்கம், அம்பத்தூர் தொழிற்பேட்டை, ஜே.ஜே. நகர் போன்ற தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அதற்குள் தீயானது அருகில் உள்ள இரண்டு கடைகளுக்கும் மளமளவென பரவியதால் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த 3 கடைகளிலும் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். ஆனாலும் இந்த தீ விபத்தில் மருந்து கடை ,தண்ணீர் கேன்கள், விளையாட்டு பொருட்கள் என மூன்று கடைகளும் எரிந்து நாசமாகி விட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த கொரட்டூர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.