Categories
சென்னை மாவட்ட செய்திகள்

15 லட்ச ரூபாய் பொருட்கள் நாசம்…. திடீரென ஏற்பட்ட விபத்து…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகி விட்டது.

சென்னை மாவட்டத்திலுள்ள திருமுல்லைவாயல் பகுதியில் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் பேக்கரி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்த கடையில் திடீரென தீ பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கடையில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர்.

ஆனால் 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள அனைத்து பொருட்களும் இந்த தீ விபத்தில் எரிந்து நாசமாகி விட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |