Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அதிலிருந்து வந்த கரும்புகை… தவிர்க்கப்பட்ட உயிர் சேதம்… தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

ஏ.சியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக வீடு தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொங்கு நகர் பகுதியில் பனியன் நிறுவன உரிமையாளரான செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டின் முதல் மாடியில் இருக்கும் ஏ.சியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியதால் அச்சத்தில் குடும்பத்தினர் உடனடியாக மாடியில் இருந்து கீழே இறங்கி விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பூர் வடக்கு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாடியில் பற்றி எரிந்த தீயை சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்து விட்டனர்.

இந்த தீ விபத்தில் வீட்டின் முதல் மாடியில் வைக்கப்பட்டிருந்த சோபா, எல்.இ.டி டிவி, ஏசி போன்ற அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகிவிட்டது. மேலும் ஏ.சியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |