பனியன் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள துணிகள் மற்றும் தையல் எந்திரங்கள் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கங்கா நகர் செல்லும் சாலையில் லக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற ராகுல் என்பவருக்கு சொந்தமான பனியன் நிறுவனம் அமைந்துள்ளது. இந்நிலையில் இரவு 7 மணி அளவில் பனியன் நிறுவனத்தில் இருந்து கரும்புகை வந்ததை பார்த்தவர்கள் உடனடியாக மத்திய நிறுவன உரிமையாளருக்கு இதுகுறித்த தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பனியன் நிறுவனத்தில் திடீரென தீப்பற்றி மளமளவென அனைத்து இடங்களுக்கும் பரவி விட்டது. இது குறித்து உடனடியாக திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன் பின் சுமார் 4 லாரிகளில் கொண்டு வரப்பட்ட தண்ணீரை பயன்படுத்தி தீயணைப்பு வீரர்கள் 4 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த தீவிபத்தில் பல லட்சம் மதிப்புள்ள தையல் எந்திரங்கள், அந்த நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த துளைகள் போன்ற அனைத்தும் முற்றிலுமாக எரிந்து நாசமாகிவிட்டது. இதுகுறித்து தீயணைப்பு அதிகாரிகள் கூறும்போது, மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.