Categories
மாநில செய்திகள்

“பெங்களூர் விமான நிலையத்தில் தீ விபத்து “பயணிகள் அதிர்ச்சி ..!!

மின்கசிவினால் பெங்களூர் விமானநிலையத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள உணவு விடுதி ஒன்றில்  திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி கட்டுக்குள் கொண்டுவந்தனர். திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் உணவுவிடுதி பலத்த சேதம் அடைந்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த விமானநிலைய காவல் துறையினர் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது .மேலும் பாதுகாப்பிற்காக விமான நிலையத்தின் பிற பகுதிகளிலும் மின்கசிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதா என் சோதனை மேற்கொள்ளப்பட்டது .

Categories

Tech |