வங்கதேசத்தில் ஆற்றின் நடுவில் பயணித்த படகு திடீரென்று தீப்பற்றி எரிந்ததில் உயிரிழப்பு எண்ணிக்கை 32 ஆக அதிகரித்திருக்கிறது.
வங்கதேசத்தின் தலைநகரான டாக்காவிலிருந்து மூன்று அடுக்கு உடைய படகு, பர்குனாவிற்கு புறப்பட்டிருக்கிறது. அப்போது Jhalakathi என்ற நகருக்கு அருகில், ஆற்றின் நடுவில் சென்றுக்கொண்டிருந்த படகில், திடீரென்று தீப்பற்றி எரிந்தது. எனவே, பயணிகள் தங்களை காத்துக்கொள்ள ஆற்றில் குதித்தனர்.
அந்த படகில் சுமார் 500 பேர் பயணித்த நிலையில், 32 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நூற்றுக்கும் அதிகமானோருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதில், பலர் உயிருக்கு போராடிய நிலையில் இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.
32 dead in #Bangladesh ferry fire, 100 others injured. boat caught fire in a river in Jhalokati state in Bangladesh, about 200 kilometers south of #Dhaka pic.twitter.com/zqtkfa5AnA
— Dr. Sandeep Seth (@sandipseth) December 24, 2021
படகின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டு தீ பற்றி எரிந்து, அதன் பின்பு பிற இடங்களில் பரவியதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், படகு, பல மணி நேரங்களாக தீப்பிடித்து எரிந்திருக்கிறது. அந்த சமயத்தில், அனைத்து பயணிகளும் தூங்கிக்கொண்டிருந்ததாக, உயிர் தப்பிய ஒரு நபர் கூறியிருக்கிறார்.