இத்தாலியின் மிலன் நகரில் இருபது மாடி கொண்ட கட்டிடத்தில் திடீரென்று தீ பற்றி எரிந்து கட்டிடம் முழுக்க பரவியுள்ளது.
இத்தாலி நாட்டின் மிலன் என்ற நகரத்தில் இருக்கும் 20 மாடி கொண்ட கட்டிடத்தின் ஒரு தளத்தில் திடீரென்று தீப்பற்றி எரிந்துள்ளது. எனவே, உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து 50க்கும் அதிகமான தீயணைப்பு படையினர், 15 வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கடும் போராட்டத்திற்கு பின் தீயை அணைத்துள்ளனர்.
மேலும், கட்டிடத்தில் இருந்த மக்களையும் பாதுகாப்பாக மீட்டனர். முதலில் ஒரு தளத்தில் பற்றி எறிந்த தீ, சில நிமிடங்களுக்குள் மொத்த கட்டிடத்திலும் பரவியது. அந்த கட்டிடத்திலிருந்து 70 குடும்பங்கள் மீட்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தின் முக்கியமான பகுதிகள் கடும் சேதமடைந்திருப்பதாகவும், உடனடியாக பயன்படுத்த முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.