கனடாவில் உள்ள ஹமில்டன் நகரில் தீ விபத்து ஏற்பட்டு ஒரு வர்த்தக கட்டிடம் இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் இருக்கும் ஹமில்டன் கிங்ஸ் தெருவில் இருக்கும் அடுக்குமாடி கட்டிடம் சுகாதார தேவைகளுக்கு உபயோகப்படுத்தப்பட்டு வந்தது. அந்த வர்த்தக கட்டிடதின் அதிகமான பகுதிகளை பலகையால் தயாரித்துள்ளனர்.
இந்நிலையில், அந்த கட்டிடத்தில் திடீரென்று தீ பற்றி எரிந்து அதிவேகத்தில் பரவியது. அதனைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டும் நெருப்பை கட்டுப்படுத்த முடியாமல் போனது. இதனைத்தொடர்ந்து அந்த கட்டிடத்தின் பெரும் பகுதி இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.