Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

செல்போன் கோபுரத்தில் எரிந்த தீ…. துரிதமாக செயல்பட்ட கடைக்காரர்கள்…. பெரம்பலூரில் பரபரப்பு…!!

செல்போன் கோபுர தானியங்கி மின்மாற்றியில் பற்றி எரிந்த தீயை உடனடியாக அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காமராஜர் வளைவு அருகில் வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வணிக வளாகத்தின் மாடியில் செல்போன் கோபுரம் உள்ளது. இந்நிலையில் கோபுரத்தில் உள்ள தானியங்கி மின்மாற்றியில் திடீரென தீ பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது.

இதனால் செல்போன் கோபுரத்தின் மீது தீப்பிடித்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்ததும் அங்கு கடை வைத்திருப்பவர்கள் தீயணைப்பான் கருவியின் மூலம் தானியங்கி மின்மாற்றியில் பற்றி எரிந்த தீயை உடனடியாக அணைத்து விட்டனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Categories

Tech |