சிலிண்டரில் கேஸ் கசிவு ஏற்பட்டு பூசாரி உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் பகுதியில் மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொளத்தூர் பகுதியில் உள்ள சுந்தரராஜப் பெருமாள் கோவிலில் பூசாரியாக இருந்துள்ளார். இந்நிலையில் கோவில் வளாகத்தில் இருக்கும் சமயலறையில் மோகன் பிரசாதம் தயார் செய்து கொண்டிருந்தபோது, திடீரென சிலிண்டரில் கேஸ் கசிவு ஏற்பட்டு மோகனின் உடலில் தீப்பற்றி உள்ளது.
இதனை அடுத்து மோகனின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து கருகிய நிலையில் இருந்த மோகனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.