Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஸ்டான்லி மருத்துவமனையில் தீ விபத்து…. எரிந்து நாசமான ஆவணங்கள்…. சென்னையில் பரபரப்பு…!!

அரசு மருத்துவமனையில் தீ விபத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் இருக்கும் ஏ பிளாக் பகுதியில் மின் கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்கள் தீயணைப்பான் கருவி மூலம் பற்றி எரிந்த தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்து விட்டனர். ஆனால் இந்த தீவிபத்தில் நிர்வாக அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் எரிந்து நாசமாகிவிட்டது. இதுகுறித்து ஸ்டான்லி மருத்துவமனை டீன் பாலாஜி கூறும் போது, உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |