பழைய இரும்பு குடோனில் பற்றி எரிந்த தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்து விட்டனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள தாம்பரம் பகுதியில் மணிவண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கிஷ்கிந்தா சாலையில் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் குடோன் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்த குடோனில் 20-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் வாசனை திரவிய பாட்டில்களை உடைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு கொண்டிருந்த போது அதிலிருந்து வந்த கியாசால் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் குடோன் முழுவதும் பற்றி எரிந்ததால் ஊழியர்கள் அங்கிருந்து அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குடோனில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.