Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருக்கும் போதே… ஏற்பட்ட பயங்கர விபத்து… தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

தென்னை நார் தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள முத்துகவுண்டனூர் பகுதியில் கதிர்வேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக தென்னை நார் தொழிற்சாலை நடத்தி வருகின்றார். இந்நிலையில் இந்த தொழிற்சாலையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென தீ விபத்து ஏற்பட்டு தீ அப்பகுதி முழுவதும் பரவி விட்டது. இதனை பார்த்ததும் தொழிலாளர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறினர். மேலும் இந்த தீ தென்னை நார் பிரித்தெடுக்கும் எந்திரத்திலும் பரவியதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்தது.

இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேரப் போராட்டத்திற்கு பிறகு தென்னை நார் தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகிவிட்டது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |