Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எல்லாமே நாசமா போச்சு…. மளமளவென பற்றி எரிந்த தீ… கோவையில் பரபரப்பு…!!

தென்னை நார் தொழிற்சாலை தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சென்றான்பாளையம் செல்லும் ரோட்டில் ஒரு தென்னை நார் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த தொழிற்சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்ததோடு, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாக்டர் மீதும் தீ மளமளவென அனைத்து இடங்களுக்கும் பரவி விட்டது.

இது குறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு சுமார் 4 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்து விட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் தென்னை நார், டிராக்டர் மற்றும் பல்வேறு பொருட்கள் எரிந்து பல லட்ச ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |