Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அப்போ இது விபத்து இல்லையா…? அதிர்ச்சியடைந்த உரிமையாளர்… CCTV கேமராவால் வெளிவந்த உண்மை…!!

எண்ணெய் ஆலைக்கு மர்ம நபர் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்திலுள்ள செம்மண்டலம் ஜோதி நகர் பகுதியில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ் என்ற மகன் இருக்கின்றார். இவர் கம்மியம்பேட்டை மெயின்ரோட்டில் சொந்தமான எண்ணெய் ஆலை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சதீஷ் ஊரடங்கு காரணமாக கடந்த 23ஆம் தேதி ஆலையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பிறகு தனது ஆலையை பார்ப்பதற்காக சதீஷ் நேற்று இரவு சென்ற போது அங்கிருந்த எந்திரங்கள் தீயில் எரிந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் அங்கிருந்த 100 லிட்டர் நல்லெண்ணையும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது.

இதனையடுத்து சதீஷ் தண்ணீரை ஊற்றி எரிந்த தீயை அணைத்த பிறகு ஆலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்துள்ளார். அந்த கேமராவில் முழு கவச உடை அணிந்த படி ஆலைக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் எந்திரங்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடிய காட்சிகளை பார்த்து சதீஷ் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் சதீஷ் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆலைக்குள் நுழைந்து தீ வைத்த மர்ம நபரின் விவரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |