Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பல லட்ச ரூபாய் நாசம்….. தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீ…. 3 மணி நேர போராட்டம்…!!

தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்து விட்டனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கவுண்டனூர் பகுதியில் தென்னை நார் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் இரவு நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனாலும் காற்றின் வேகத்தால் தீ மளமளவென அனைத்து இடங்களிலும் பரவிவிட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார், டிராக்டர், தென்னை நார் போன்றவை எரிந்து நாசமாகி விட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.

Categories

Tech |