Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மளமளவென பற்றி எரிந்த தீ…. 20 மணி நேர போராட்டம்…. திணறும் தீயணைப்பு வீரர்கள்…!!

சதுரகிரி மலையில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க முடியாமல் 20 மணி நேரத்திற்கும் மேலாக வனத்துறையினர் போராடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி மற்றும்  பிரதோஷம் அன்று மட்டும் பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 24ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை மாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துவிட்டு கோவிலில் இருந்து இறங்கி தாணிப்பாறை அடிவாரம் பகுதிக்கு வந்துள்ளனர்.

அந்த சமயம் சதுரகிரி மலையிலுள்ள சாப்டூர் வனசரகத்திற்கு உட்பட்ட தவசி பாறை வனப்பகுதியில் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து காற்றின் வேகத்தால் மளமளவென பற்றி எரிந்த தீயில் மூலிகைகள், அரிய வகை தாவரங்கள், ஏராளமான மரங்கள் மற்றும் வனவிலங்குகள் தீயில் கருகி விட்டன. இது குறித்து தகவலறிந்த வத்திராயிருப்பு மற்றும் சாப்டூர் வனத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் சுமார் 20 மணி நேரத்திற்கும் மேலாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |