Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட தீ விபத்து… பற்றி எரிந்த குப்பை கிடங்கு…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

மாநகராட்சி குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்து விட்டனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள செவலூர் பிரிவு சாலை அருகில் மணப்பாறை நகராட்சியின் குப்பை கிடங்கு அமைந்துள்ளது. இங்கு நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டி வைத்துள்ளனர். இந்நிலையில் இந்த குப்பை கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் குப்பைகள் பற்றி எரிந்து அப்பகுதி முழுவதும் கரும் புகை சூழ்ந்துள்ளது. இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர்.

Categories

Tech |