Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்திருக்கும்…? கொழுந்துவிட்டு எரிந்த தீ… பல மணி நேர போராட்டம்…!!

பழைய பொருட்கள் சேமித்து வைக்கும் குடோனில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள கொருக்குப்பேட்டை பகுதியில் சிவராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் பிளாஸ்டிக் மற்றும் பழைய இரும்பு பொருட்கள் வியாபாரம் செய்வதற்காக சொந்தமாக குடோன் வைத்துள்ளார். இந்நிலையில் அதிகாலை வேளையில் இந்த குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, ஐகோர்ட்டு, சத்தியமூர்த்தி நகர் போன்ற பகுதிகளை சேர்ந்த 5 தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் 4 மணிநேர போராட்டத்திற்கு பிறகு குடோனில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைத்து விட்டனர்.

இந்த தீ விபத்தில் குடோனில் இருந்து அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகிவிட்டது. மேலும் அந்த குடோனுக்கு அருகில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஏ.சி. இயந்திரம், தண்ணீர் குழாய்கள், ஜன்னல் கதவுகள் போன்றவையும் இந்தத் தீயில் எரிந்து நாசமாகி விட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |