வைக்கோல் போரில் பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்து விட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தாதம்பட்டி பகுதியில் ரங்கசாமி என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக ஒரு வைக்கோல் போர் உள்ளது. இந்நிலையில் திடீரென இந்த வைக்கோல் போரில் தீ பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் வைக்கோல் போரில் பற்றி எரிந்த தீயை உடனடியாக அணைத்து விட்டனர். இவ்வாறு தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் அருகிலுள்ள மரங்களுக்கு தீ பரவாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.