Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ரொம்ப வருஷமா இப்படிதான்… பூட்டிய வீட்டில் பற்றிய தீ… தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

பல ஆண்டு காலமாக பூட்டி கிடக்கும் ஓட்டு வீட்டில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாரத் சாலையில் இருக்கும் பழைய ஓட்டு வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள் ஓட்டு வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். இதுகுறித்து தீயணைப்பு வீரர்கள் கூறும் போது மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் அந்த வீட்டின் உரிமையாளர் வெளியூரில் வசித்து வருவதால் பல ஆண்டு காலமாக அந்த வீடு பூட்டியே கிடப்பதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்தில் அந்த வீட்டில் இருந்த இரு சக்கர வாகனம், மர சாமான்கள் போன்றவை எரிந்து நாசமாகி விட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |