Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நகை கடையில் தீ விபத்து…. அலறியடித்து ஓடிய ஊழியர்கள்…. சென்னையில் பரபரப்பு….!!

திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் நகை கடை முழுவதும் பற்றி எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள என்.எஸ்.சி போஸ் சாலையில் தனியாருக்கு சொந்தமான நகை கடை ஒன்று செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்த நகை கடையில் ஊழியர்கள் வேலை பார்த்து கொண்டிருந்த சமயத்தில் திடீரென அங்கு மட்டும் மின்சாரம் தடைபட்டுள்ளது. இதனால் நகை கடையின் ஊழியர்கள் சிறிது நேரம் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தால் கடை முழுவதும் பற்றி எரிய ஆரம்பித்துள்ளது.

இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் கடையிலிருந்து அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு நகைக்கடையில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். ஆனால் இந்த தீவிபத்தில் கடை முழுவதும் எரிந்து நாசமாகி விட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |