உயர் மின்னழுத்த கம்பிகள் அறுந்து விழுந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேன்கனிக்கோட்டை, குல்லமாகுட்டை போன்ற இடங்களில் உயர் மின்னழுத்த கம்பிகள் திடீரென அறுந்து விழுந்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. மேலும் அருகில் இருந்த விளை நிலங்களிலும் தீயானது வேகமாக பரவி எரிந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த முட்டைக்கோஸ் பயிர்கள் எரிந்து நாசமாகி விட்டது.
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். இதனையடுத்து மின்வாரிய ஊழியர்கள் மின் விநியோகத்தை துண்டித்த பிறகு பழுதை சீரமைத்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறும் போது உயர் மின்னழுத்தம் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.