மாலத்தீவின் தலைநகரில் அமைந்துள்ள ஒரு அடுக்கு மோடி கட்டிடத்தில் தீ பற்றி எரிந்து பயங்கர விபத்து ஏற்பட்டதில் 10 நபர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலத்தீவின் தலைநகரான மாலேவில் அமைந்துள்ள ஒரு அடுக்கு மாடி கட்டிடத்தில் நேற்று நள்ளிரவு நேரத்தில் வாகனங்களை நிறுத்தக்கக்கூடிய இடத்தில் தீ பற்றி எரிந்து, குடியிருப்புகளுக்கும் வேகமாக பரவியது. இதில் இந்தியாவை சேர்ந்த 9 நபர்கள் உட்பட 10 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
மேலும் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இது பற்றி நகரின் மேல் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது, தீ விபத்தில் பலியான நபர்களை அடையாளம் காணும் பணி நடக்கிறது. பலியானவர்களில் அதிகமானோர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்று கூறியிருக்கிறார். இந்த விபத்தில் பலியான மக்களுக்கு இந்திய தூதரகம் இரங்கல் செய்தி வெளியிட்டிருக்கிறது.