Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மின்கசிவை தொடர்ந்து…. வெடித்து சிதறிய கியாஸ் சிலிண்டர்…. பற்றி எரிந்த மளிகை கடைகள்….!!

மளிகை கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 லட்ச ரூபாய்க்கும் அதிகமான பொருட்கள் எரிந்து நாசமாகி விட்டது.

திருச்சி மாவட்டத்திலுள்ள லால்குடி பகுதியில் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் வாளாடி மெயின்ரோட்டில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ஆனந்த் வழக்கம் போல மளிகை கடைக்கு சென்று வியாபாரம் செய்வதற்காக மின் விளக்குகளை போட்டுள்ளார். அப்போது மின்கசிவு ஏற்பட்டு எதிர்பாராதவிதமாக மளிகை கடை தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்ப்பதும் அதிர்ச்சி அடைந்த ஆனந்த் உடனடியாக கடையை விட்டு வெளியேறினார்.

அதன்பிறகு கடையில் வைத்து இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இதனால் அருகில் இருக்கும் ரகுராமன் என்பவரது மளிகை கடையும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு கடைகளிலும் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் 7 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகி விட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |